ராணிப்பேட்டையில் அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆரம்பித்து 53 ஆண்டுகள் ஆகிறது இதனைத் தொடர்ந்து தமிழக முழுவதும் அதிமுகவின் 53 ஆம் ஆண்டு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள், இதனைத் தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை நகர செயலாளர் கே பி சந்தோசம் தலைமையில் அதிமுக 53 ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் சுகுமார் கலந்து கொண்டு முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோரின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து பின் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி கொண்டாடினார்.
இதேபோல் மாந்தாங்கல் எம்ஜிஆர் சிலை வாலாஜா ஆற்காடு திமிரி கலவை விசாரம் புளியங்கன்று ஆகிய பகுதிகளுக்கு சென்று முன்னாள் முதல்வர் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஆங்காங்கே அன்னதானமும் வழங்கினார்கள், இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments