Breaking News

முதல்வர் ரங்கசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தல்..

 


புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், 

லாபத்துடன் இயங்கும் மின்துறையை தனியார் மயமாக்கும் முடிவை மூடி மறைத்து,புதுவை அரசு இரட்டை வேடம் போட்டு வருகிறது.ஒரு புறம் தனியார் மயமாக்கல் சம்பந்தமான டென்டரை கால நீட்டிப்பை செய்து கொண்டு வருகிறது. மறுபுறம் தனியார் மையம் ஆக்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில்

புதுச்சேரிக்கு வருகை புரிந்த மத்திய மின் துறை அமைச்சரிடம்,முதல்வர், அமைச்சர் மின்துறையை தனியார் மாயமாக்க கூடாது என்று வலியுறுத்தவில்லை.இதிலிருந்து மின்துறை தனியார் மயமாக்கும் ஆதரவான நிலைப்பாட்டை அரசு எடுத்துள்ளதாக ஒளிவு மறைவின்றி தெரிகிறது. 

காரைக்கால் பார்வதி ஈஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான எட்டு ஏக்கர் இடங்களை பட்டா போட்டு விற்பனை செய்ய முயற்சி நடந்துள்ளது

கோவில் இடம் விவகாரத்தில் சர்வேயர் மாவட்ட துணை ஆட்சியர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் ஆனால் இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை இவற்றில் முக்கிய குற்றவாளிகள் மூடி மறைக்கப்பட்டு இருக்கிறார்கள் இந்த விவகாரத்தில் இந்து அறநிலையத்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி தலையிட்டு இது சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார். 

No comments

Copying is disabled on this page!