Breaking News

சீர்காழியில் அதிமுக நகர பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கழக செயலாளர் பங்கேற்று சிறப்புரை வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டுமென வேண்டுகோள்..

 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட அதிமுக செயல் வீரர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் அனைத்து பகுதிகளும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் எனவும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற தொடர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். பின்னர் பேசுகையில் திமுக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடுத்தும் உடையில் திமுக சின்னத்தை போட்டது போன்று அதிமுக இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுவெளியில் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அதிமுகவை வெளிப்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதேபோன்று தற்போது இளைஞர்கள் நாம் தமிழர் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதை தடுக்கும் விதமாக பாரம்பரிய கட்சியான அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் உறவினர்கள் மற்றும் பொதுமக்களிடையே தெரிவித்து அதிமுகவிற்கு பலம் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார் தொடர்ந்து திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பொறியாளர் மார்க்கோனி தலைமையில் அதிமுகவில் இணைத்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் புதிய உறுப்பினர்களுக்கு அதிமுக துண்டை அணிவித்து வரவேற்றார் தொடர்ந்து அதிமுகவுக்கு சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட அவை தலைவருமான பி.வி பாரதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரமோகன், மாநில அம்மா பேரவை இணைச்செயலாளர் பொறியாளர் மார்க்கோனி, சீர்காழி நகர பொறுப்பாளர் பாலமுருகன் , நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!