காரைக்கால் ஸ்ரீ பர்வதீஸ்வரர் கோவில் நில மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி துணை நிலை ஆளுநரிடம்,அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பர்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நில மோசடி வழக்கில் சப் கலெக்டர் ஜான்சன், நில அளவையாளர் ரேணுகா உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டள்ள நிலையில் என்.ஆர் காங்கிரஸ் பிரமுகர் ஜேசிபி ஆனந்தை போலிசார் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் நிர்வாகிகள்,துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதனை நேரில் சந்தித்து கோவில் நில மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி மனு அளித்தனர்.
அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அன்பழகன், கோயில் நில மோசடி விவகாரத்தில் புதுவை அரசு மவுனம் காப்பது பல்வேறு சந்தேகத்தை எழுப்பிள்ளது என்றும், இது தொடர்பாக புதுவை அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார்.
கோவில் நில மோசடி குறித்து, ஆளுநரிடம் சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தியதாகவும், ஓரிரு தினங்களில் தலைமையின் அனுமதி பெற்று புதுச்சேரி அதிமுக சார்பில் சிபிஐக்கு புகார் அனுப்பப்படும் என்றார்.
No comments