பாப்ஸ்கோ ரேஷன் கடைகளை, மீண்டும் பாப்ஸ்கோ நிர்வாகமே நடத்த கோரி, ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
புதுச்சேரியில் கூட்டுறவு சங்கம் மூலம் 327 ரேஷன் கடைகள், பாப்ஸ்கோ 37, தனியார் 17, மற்ற சங்க கடைகள் 4 இயங்கி வருகிறது. காரைக்காலில் 10 கடைகள் பாப்ஸ்கோ மூலம் இயங்குகிறது. கடந்த 7 ஆண்டிற்கு முன்பு நிறுத்தப்பட்ட இலவச அரிசி மீண்டும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ளது.
புதுச்சேரி காரைக்காலில் உள்ள 47 பாப்ஸ்கோ கடைகளை கூட்டுறவு சங்கம் மூலம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. பாப்ஸ்கோ நடத்திய ரேஷன் கடைகளை மீண்டும் பாப்ஸ்கோ மூலமே நடத்த நடவடிக்கை எடுக்க கோரி ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் குடிமைப்பொருள் வழங்கல் துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏ.ஐ.டி.யு.சி., மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் ரமேஷ், ஜெய்சங்கர் முன்னிலை வகித்தனர். கடையை மீண்டும் பாப்ஸ்கோவிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்பட்டது.
No comments