Breaking News

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வீலிங்ஸ் செய்த இளைஞர் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு.


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேலம் புறவழி சாலையில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வீலிங்ஸ் சென்ற இளைஞர் இருசக்கர வாகனம் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உ.கீரனூர் காலனியை சேர்ந்தவர் ராமலிங்க மகன் ரவீந்த்குமார் என்கிற ராகுல், இவர் தனது நண்பர்களுடன் ஞாயிற்றுக்கிழமை மாலை இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை சேலம் ஜி.எஸ்.டி சாலையில் இருசக்கர வாகனத்தில் வீலிங்ஸ் செய்ய சென்றதாக கூறப்படுகிறது இந்த நிலையில் ராகுல் தனது நண்பர்கள் மூன்று பேருடன் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வீலிங்ஸ் செய்த பொழுது உளுந்தூர்பேட்டை சேலம் புறவழி சாலையில் உள்ள திருச்சி ரோடு ரவுண்டானா பகுதியில் இருந்த மின்கம்பத்தில் ராகுல் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் அதிபயங்கரமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் அங்கேயே துடிதுடித்து கிடந்த அவரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அவரை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பரிசோதித்தபோது அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பகுதியில் ராகுல் நண்பர்கள் மற்றும் அவர் உறவினர்கள் 500க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கூடியதால் பெரும் பரபரப்பு நிலவியது இதைத்தொடர்ந்து ராகுல் உடல் பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது இது பற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

இருசக்கர வாகனத்தில் வீலிங்ஸ் சென்ற இளைஞர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

No comments

Copying is disabled on this page!