Breaking News

பேரணாம்பட்டு அடுத்த பத்தல பள்ளி மலைப்பாதையில் பிரேக் பழுதாகி அரிசி லோடு ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து.


வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தல பள்ளி மலை கிராமத்தில் பிரேக் பழுதாகி அரிசிலோடு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது கர்நாடக மாநிலம் டும்கூர் பகுதியில் இருந்து சென்னைக்கு 25 டன் அரிசியை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது லாரியை விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த ஜோதி வயது(34) என்பவர் ஓட்டி வந்தார். 

இதனிடையே லாரி தமிழக ஆந்திரா எல்லையான பத்தல பள்ளி மலைப்பாதையில் வரும்போது பிரேக் பழுதாகி இடது புறம் உள்ள பள்ளத்தில் கண்டைனர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் லாரி ஓட்டுநர் ஆனந்த ஜோதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

மேலும் கண்டெய்னர் லாரியில் ஏற்றி வந்த அரிசி மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன கண்டெய்னர் லாரி மலைப்பாதை சாலையில் கவிழ்ந்ததால் தமிழகத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் அண்டை மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வரும் வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பின்னர் உடனடியாக போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர் இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது மேலும் விபத்து குறித்து பேர்ணாம்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!