Breaking News

கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.


திருநெல்வேலி மாநகரப் பகுதியில்; கொலை முயற்சி வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்த திருநெல்வேலி டவுண் பகுதியைச் சேர்ந்த ஜானகிராமன் மகன் ஐயப்பன்(19) மற்றும் மாரிமுத்து மகன் தங்கதுரை(20) ஆகியோர் மீது திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், மேற்கு, திருமதி.V.கீதா, திருநெல்வேலி டவுண் சரக காவல் உதவி ஆணையர் திரு.செந்தில்குமார் மற்றும் திருநெல்வேலி டவுண் காவல் ஆய்வாளர் திரு.கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், திரு.ரூபேஷ் குமார் மீனா, இ.கா.ப, அவர்களின் உத்தரவின்படி 01.10.2024-ம் தேதி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர். 

No comments

Copying is disabled on this page!