மாற்றுத்திறனாளிகளே சக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் நிகழ்ச்சி சம்பவம்.
ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று சேர்ந்து சக மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை பொருட்கள் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் உதவும் நிகழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது, ஈரோடு மாநகராட்சி உட்பட்ட பகுதியான சித்தோட்டில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று சேர்ந்து சக மாற்றுத்திறனாளிகளுக்கு மல்லிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் உதவும் நிகழ்ச்சியானது நடைபெற்றது.
மாற்றுத் திறனாளிகள் ஒன்று சேர்ந்து வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கி இருக்கும் சக மாற்றுத்திறனாளிகளுக்கு சுமார் இரண்டு வருட காலமாக 1500 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி வருகின்றனர், வழங்கப்படும் பொருட்களில் பொன்னி,அரிசி, பருப்பு வகைகள், பயர் வகைகள், சக்கரை, கடலை சமையல் எண்ணெய், சாம்பார் தூள்,சிக்கன் மசாலா, மிளகாய் தூள், போன்ற ஆறு வகையான மசாலா பொருட்கள், சோப்புத்தூள் மற்றும் வாஷிங் பவுடர் போன்ற 20க்கும் மேற்பட்ட பொருட்களை வழங்கினர்.
வாழ்வாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கு இதுபோன்ற உதவும் சக மாற்றுத் திறனாளிகளே நிகழ்ச்சி சம்பவம் பொதுமக்கள் இடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
No comments