Breaking News

திருப்பத்தூர் உஸ்மானியா பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி ராஜன் தெரு பகுதியிலுள்ள அரசு உதவிபெறும்   உஸ்மானியா மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய் கிழமை இன்று பிற்பகல் 12.15 மணி அளவில்  பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்கு சிறப்பு விருந்தினராக திருப்பத்தூர்  நகர மன்ற துணை சேர்மன் சபியுல்லா கலந்து கொண்டு 31 மாணவர்களுக்கு  விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். 

இதில்  நகர மன்ற உறுப்பினர் அசோகன்,  பள்ளியின் பொதுச் செயலாளர் லியாகத் அலி, பள்ளி  தாளாளர்  சையத் மொஹியத்தீன்,  பள்ளியின் தலைமை ஆசிரியர் சையத் முஹம்மத் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!