ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கைத்தறி மற்றும் துணிகள் துறை அமைச்சர் ஆர் காந்தி சிறப்புரை ஆற்றினார், இதில் சிறப்பு அழைப்பாளராக நீர் வளம் கனிமம் மற்றும் சுரங்க துறை துரைமுருகன் அவர்கள் பங்கேற்று விலையில்லா மிதிவண்டி வழங்கி விழா பேருரை ஆற்றினார். மேலும் இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கடா ரமணன் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற கூட்டமைப்பின் தலைவர் முருகன் ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் ஒன்றிய குழு உறுப்பினர் துளசி. லாலாபேட்டை ஊராட்சி மன்ற தலைவர் கோகுலன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பரந்தாமன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட கல்வி அலுவலர் விஜயகுமார் நன்றி தெரிவித்தார் இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் ஆசிரியைகள் மாணவ மாணவியர்கள் ஏராளமான பங்கேற்றனர்.
No comments