திருச்செந்தூர் அருகே மரக்கடை குடோனில் தீ விபத்து.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள வாத்தியார் குடியிருப்பை சேர்ந்த சுரேஷ்(45). இவருக்கு திருச்செந்தூர் காயல்பட்டினம் சாலையில் வீரபாண்டியன்பட்டினம் அருகே மரக்கடை குடோன் உள்ளது. இந்த குடோனில் தேக்கு, வேங்கை, கோங்கு, போன்ற விலை உயர்ந்த மரங்கள் வெட்டி தயார் செய்யப்பட்டு வெளிநாடு மற்றும் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மரக்கட்டைகள் இருந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணிக்கு குடோனில் திடீரென தீ பிடித்துள்ளது. குடோனில் யாரும் இல்லாததால், தீ விபத்தை பார்த்த நபர் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தீயணைப்புத்துறையிருககு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திருச்செந்தூர் தீயணைப்புத் துறையினர். தீயை அணைக்க முடியாமல் திணறினர். இதனால் சாத்தான்குளம் தீயணைப்பு துறையினர், டிசி டபிள்யூ தனியார் தொழிற்சாலை தீயணைப்பு வாகனமும் வர வைக்கப்பட்டது.
மரக்கட்டையில் என்பதால் தீ வேகமாக எரிந்தது. சுமார் இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் குடோனில் இருந்த அனைத்து மரக்கட்டைகளும் முற்றிலுமாக தீயில் எறிந்து கருகியது. இதன் மதிப்பு பல கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் செல்: 7339011001
No comments