திருப்பத்தூர் மாவட்டத்தில் பேரிடர் மீட்பு பயிற்சி முடித்த காவலர்கள் அடங்கிய மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, உத்திரவின் பேரில் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்டு காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு உட்கோட்டத்திலும் பேரிடர் மீட்பு பயிற்சி முடித்த காவலர்கள் அடங்கிய மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் இன்று (15.10.2024) ஆய்வு மேற்கொண்டு மீட்பு பணியில் துரிதமாக பாதுகாப்புடன் செயல்படுவது குறித்து அறிவுரைகள் வழங்கினார்கள்.
மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை குறித்து கீழ்க்கண்ட உதவி எண்களை தொடர்பு கொண்டு மாவட்ட சிறப்பு காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளப்படுகின்றது.( 04179-221104, 9442992526, 04179-221103, மற்றும் 9159959919).
No comments