Breaking News

  

திருவள்ளூர் அடுத்த நெடும்பரம் ஊராட்சி பஸ் நிறுத்தத்தில் 3- வயது குழந்தை மீது சரக்கு வாகனம் மோதியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பலி.

திருவள்ளூர் மாவட்டம் கனக்கம்மாச்சத்திரம் அடுத்த  நெடும்பரம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் துர்கா பிரசாத். இவரது மனைவி மகிதா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இதில்  இரண்டாவது மகன் ககன் சாய் (வயது 3). இந்நிலையில் திருப்பதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு கனகம்மாசத்திரம் பகுதியில் பேருந்தில் இருந்து  இறங்கி அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக  ஆட்டோவில் சென்று  நெடும்பரம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி சாலை கடக்க நின்று கொண்டிருந்தனர். 

அப்போது  பெற்றோர்கள் கவனக்குறைவாக இருந்ததால் இவர்களை அழைத்துச் செல்ல வந்த உறவினரை கண்டதும் குழந்தை ஓட ஆரம்பித்துள்ளது. அப்போது திருவள்ளூரில் இருந்து திருத்தணி நோக்கி வந்த சரக்கு வாகனம் மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் சாலையை கடக்க முயன்ற 3 வயது குழந்தை மீது மோதி படுகாயம் அடைந்தது.  பலத்த காயமடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு  திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகன ஓட்டுநர் தப்பி ஓடியதால் இச்சம்பவம் குறித்து கனகம்மா சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

No comments

Copying is disabled on this page!