அண்மையில் மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் வீட்டிற்கு நேரில் வந்து மலர் தூவி அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா. குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் வசித்து வந்த முன்னாள் அமைச்சர் க.சுந்தரம் (76) கடந்த 18ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். பொன்னேரி சட்டமன்ற தொகுதியில் இரு முறை வெற்றி பெற்று கருணாநிதி ஆட்சியில் 2 முறை அமைச்சராகவும், திமுகவின் துணை பொது செயலாளராகவும், இறக்கும் வரையில் திமுகவின் ஆதிதிராவிடர் நலக்குழு அணியின் மாநில தலைவராகவும் இருந்து வந்தார்.
உடல்நல குறைவு காரணமாக கடந்த 18ஆம் தேதி உயிரிழந்த க.சுந்தரம் உடலுக்கு முதலமைச்சர் நேரில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி இருந்தார். நேற்று முன் தினம் படத்திறப்பு விழாவும், நேற்று 16ஆம் நாள் நினைவு அஞ்சலியும் நடைபெற்றது. இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நேரில் வந்து க.சுந்தரம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு ஆ.ராசா ஆறுதல் கூறினார்.
No comments