கச்சிராயபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை திருடிய இளைஞரை கைது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே எடுத்தவாய் நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சடையன் மகன் சுப்ரமணியன் இவர் கடந்த பிப்ரவரி மாதம் இருசக்கர வாகனம் திருடு போனதாக கச்சிராயபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மாதவச்சேரி கிராமத்தில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் இருசக்கர வாகனத்தில் நின்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் முண்ணுக்கும் பின் முரணாக பதில் கூறியதை அடுத்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது அவர் மாதவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அழகப்பன் மகன் ராமர் வயது 26 என்பதும் சுப்பிரமணியன் என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடியவர் என்பதும் தெரிய வந்தது. பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்தனர்.
No comments