மத்திய அரசின் நியாய ஒலி திட்டத்தின் கீழ் புதுச்சேரி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு குறித்தான பேரணி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது.
மத்திய அரசின் நியாய ஒளி திட்டத்தின் கீழ் புதுச்சேரி டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, மாணவர்களால் சட்டக் கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு பொதுப் பேரணி நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரையில் உள்ள காந்தி சிலையிலிருந்து புறப்பட்ட பேரணியை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர். பேரணியானது கடற்கரை சாலை, நேரு சாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக மீண்டும் கடற்கரை சாலையை வந்தடைந்தது.
பேரணியில் மோட்டார் வாகன சட்டப்படி உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டினால் குற்றம் நுகர்வோர் உரிமை மீறல் புகார்களை ஆணையத்திடம் தெரிவித்தல் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் சட்டப்படி குற்றம் சட்டத்தை மதிப்போம் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்வது குற்றம் தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி எவ்வாறு சட்டக் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர்.
No comments