Breaking News

மணலூர்பேட்டையில் அரிமா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்.

 



கள்ளக்குறிச்சி மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க உதவியுடன், மணலூர்  பேட்டையில் அரிமா சங்கம்,  சென்னை மணலி தி கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை மற்றும் பாண்டிச்சேரி  அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நேற்று காலை மணலூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.


 அரிமா சங்கத் தலைவர் சரவணன் தலைமையில் . செயலாளர் திருமால், பொருளாளர் முனியன் முன்னிலையில் மாவட்ட தலைவர் அம்மு ரவிச்சந்திரன் இம் முகாமை துவக்கி வைத்தார். மேலும் முகாமில் முன்னாள் தலைவர்கள் செந்தில்குமார்,ரவிச்சந்திரன், ஜெய்கணேஷ்  சையத் அலி மற்றும் , சிவபிரகாசம், மோகன், சுரேஷ் ரகுபதி ஆகியோர் கலந்து கொண்டு முகாம் சிறக்க ஏற்பாடு செய்தனர் முகாமில் 147 நபர்கள் கலந்து கொண்டனர் .அதில் 45 நபர்கள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இம் முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றவர்களுக்கு மருந்து மாத்திரைகள் சாப்பாடு பிஸ்கட் தண்ணீர் பாட்டில் ஆகியவை  இலவசமாக வழங்கப்பட்டது. முகாமிற்கான ஏற்பாடுகளை முன்னாள் தலைவர் முருகன் சிறப்பாக ஏற்பாடு செய்தார். பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை ராகவன் தலைமையிலான குழுவினர் மிகச் சிறப்பாக பணியாற்றினர்.


No comments

Copying is disabled on this page!