Breaking News

ஆண்டார்குப்பத்தில் பௌத்தம் ஏற்பு விழா நடைபெற்றது; 7 பேர் புத்த மதத்தை தழுவினர்.


திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டார் குப்பத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பெரவள்ளூர் ராஜா அவர்  மகன் ஜித்தன் உள்ளிட்டோர் பௌத்த மதத்தை தழுவும் பௌத்த மத ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பகவான் கௌதம புத்தர், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் அலங்கரிக்கப்பட்ட சிலைகள் மத்தியில் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு மலர் தூவி பௌத்த மத வாக்குறுதிகளை ஏற்று பௌத்த மதத்தை ஏழு பேர் ஏற்றுக் கொண்டனர். 

பின்னர் பௌத்த மதம் குறித்த விளக்கங்களும் அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவியதற்கான காரணங்களையும் தற்போது உள்ள நிலைப்பாட்டினையும் தலைமையேற்று நடத்திய புத்த பிக்கு புத்த பிரகாஷ் தீட்சை அளித்து விளக்கம் அளித்தார்.

புத்த தம்ம சங்க மாநில செயலாளர் தனராஜ் வரவேற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புத்த பிக்குகள் சமண அரியா, சம்பத், தென்னிந்திய சாக்ய பௌத்த சங்க தலைவர் வான பிக்கு நவேந்திரா (எ) குணசீலன்,தமிழ்நாடு பௌத்த அறநெறியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் கஜேந்திரன் அப்பாதுரை, புத்ததம்ம சங்க மாநில தலைவர் அன்புவேந்தன் மாவட்ட செயலாளர் குடியரசு உள்ளிட்டோர் கலந்துகொண்டு புத்த போதனைகளை விளக்கி கூறினர். 

சிறப்பு விருந்தினர்களாக அருப்புக்கோட்டை அரசு கல்லூரி முதல்வர் பேராசிரியர் டேவிட்,விடுதலைக் கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பிரகாஷ், மூத்த வழக்கறிஞர்கள் நெடுஞ்செழியன்,மோகன்,அமரகவி உள்ளிட்டோர் மற்றும் புரட்சி பாரதம் கட்சி மாநில நிர்வாகி பூவை சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!