Breaking News

வேலூர் மாவட்டம் காட்பாடி அக்சிலியம் கல்லூரியின் 65வது பட்டமளிப்பு விழா.


வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் அக்சிலியம் தன்னாட்சி கல்லூரியில் 65வது பட்டமளிப்பு விழா பள்ளி கலையரங்கில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப குழு செயலாளர் பேரா. முனைவர் எஸ். வின்சென்ட் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் முனைவர் மேரி ஜோஸ்பின் ராணி கல்லூரி செயலாளர் முன்னிலை வகித்தார்.

முனைவர் ஆரோக்கிய ஜெய சீலி கல்லூரியின் முதல்வர் வரவேற்புரையாற்றினார், வின்சி தேர்வாணையர் மற்றும் இயற்பியல் துணைத் தலைவர் அமலா வளர்மதி துணை முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் முனைவர் வின்சன்ட்  887 இளங்கலை மாணவியர்கள்  273 முதுகலை மாணவர்கள் என மொத்தம் 1150 மாணவர்களுக்கு பட்டமளித்தார் இதில் உதவி பேராசிரியர் கணிதத் துறை முனைவர் சபர்மதி நன்றியுரை ஆற்றினார்.

- வேலூர் மாவட்ட செய்தியாளர்  எஸ். விஜயகுமார்.

No comments

Copying is disabled on this page!