திருத்தணி அருகே பொதட்டூர் பேட்டை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் 100 சவரன் நகை பணம் கொள்ளையடித்த வழக்கில் 4 கொள்ளையர்களுடன் நகைக்கடை உரிமையாளர், பெண் ஊழியர் என 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டி எஸ் பி கந்தன் தலைமையிலான சிறப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் ஆர்.கே.பேட்டை கிராமத்தில் உள்ள வாசு என்பவருக்கு சொந்தமான நகைக்கடையில் பணியாற்றும் சுபா என்ற பெண் மூலம் நகையை விற்க ஆர்கே பேட்டை சேர்ந்த பூபதி, வேணு, சிரஞ்சீவி மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த தினேஷ் ஆகியோர் முயற்சி செய்துள்ளனர்.
அப்போது கடையின் உரிமையாளரான வாசு என்பவர் கொள்ளையடிக்கப்பட்ட நகை என்பதால் மிகக் குறைந்த விலைக்கு நகையை வாங்க முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்ததையடுத்து டிஎஸ்பி கந்தன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சிரஞ்சீவி (32)தினேஷ்( 23)வேணு(35) பூபதி(24) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.
மேலும் திருட்டு நகையை விற்பனை செய்வதற்கு உதவிய பெண் ஊழியர் சுபா மற்றும் நகை கடை உரிமையாளர் வாசு ஆகியோரையும் சேர்த்து ஆறு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கையில் வைத்திருந்த 35 சவரன் நகை மற்றும் 65 சவரன் தங்க நகையை உருக்கி பணமாக வைத்திருந்த ரூ.8.85 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments