திருநெல்வேலி சந்திப்பு ஷிபா மருத்துவமனையின் 54வது ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது சந்திப்பு ஷிபா மருத்துவமனையின் 54வது ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி சந்திப்பு ஷிபா மருத்துவமனையின் 54வது ஆண்டு துவக்க விழா மருத்துவமனை வளாகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது, விழாவிற்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் M.K.M. முகம்மது ஷாபி தலைமை தாங்கினார். மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் முருகன், ராமசுப்பிரமணியன், முகம்மது இப்ராஹிம், அகமது யூசுப், அஜய் ரெக்ஸ், சங்கர ஆவுடையப்பன், ஹரி நிவாஸ் ஆகியோர் கலந்துகொண்டு ஷிபா மருத்துவமனையின் 53 ஆண்டுகால மருத்துவ சேவை குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் M.K.M. முகம்மது ஷாபி அவர்கள் கூறியதாவது திருநெல்வேலியில் தனியார் மருத்துவமனை இல்லாத காலகட்டத்தில் 1971 ஆம் ஆண்டு அக்டோபர் 12ஆம் தேதி மருத்துவர் அல்லாத எனது தந்தை M.K.M. முகம்மது ஹுசைன் அவர்களால் அனைத்து மக்களுக்கும் உயர் சிகிச்சை கிடைக்கும் வகையில் 50 படுக்கை வசதியுடன் ஷிபா பாலி கிளினிக் தொடங்கப்பட்டது. தற்போது பல்வேறு மருத்துவ துறைகளுடன் 53 வருடங்களைக் கடந்து 150 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையாக உயர்ந்து உள்ளது.
மருத்துவமனையின் வளர்ச்சிக்கு ஆதரவு அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
No comments