காரைக்குடியில் நடைபெற்ற 50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன் பட்டம் வென்றார்.
11 சுற்றுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் நந்திதா 9 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். ரூபாய் 700000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த பிரியங்கா, மற்றும் பத்மினி, கிரன் 8.5 புள்ளிகளையும், தமிழகத்தின் சரண்யா, சிட்லாஞ் சாக்ஷி, கோமஸ் மேரி வர்ஷினி, ரக்ஷித ரவி மற்றும் கல்கர்ணி பக்தி ஆகியோர் 8 புள்ளிகளையும் பெற்றனர். இவர்களுக்கு 550000, ₹450000, ₹350000, ₹250000, ₹200000, ₹150000, ₹150000, ₹100000, ₹100000 ரொக்கம் பரிசாக வழங்கப்பட்டன.
விழாவில் மாநில செஸ் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திரு. பி. ஸ்டீபன் அவர்கள், தேவகோட்டை சப் கலெக்டர் திரு. ஆயுஷ் அவர்கள் மற்றும் செட்டிநாடு பப்ளிக் பள்ளி சேர்மன் திரு. SP. குமரேசன் ஆகியோர் பங்குபெற்று போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தனர். விழாவில் பள்ளி முதல்வர் திருமதி. S. உஷாகுமாரி அவர்கள் வரவேற்றார்.
பள்ளி சேர்மன் திரு. SP. குமரேசன் அவர்கள் தலைமயுறையாற்றினார். துணைச் சேர்மன் திரு. K. அருண்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். வெற்றிபெற்ற அனைவருக்கும் பள்ளி சேர்மன் திரு. KP. குமரேசன் அவர்கள் மற்றும் துணைச் சேர்மன் திரு. K. அருண்குமார் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் பள்ளி துணை முதல்வர் திருமதி. பிரேமசித்திரா அவர்கள் பள்ளியின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
No comments