50வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் மூன்றாவது முறையாக காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் 03.10.2024 அன்று தொடங்கியது.
பள்ளி முதல்வர் திருமதி. S. உஷாகுமாரி அவர்கள் வரவேற்றார். பள்ளி சேர்மன் திரு. SP. குமரேசன் அவர்கள் தலைமயுறையாற்றினார். துணைச் சேர்மன் திரு. K. அருண்குமார் அவர்கள் முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட செஸ் கூட்டமைப்பின் கூடுதல் செயலாளர் திரு. கருப்பையா அவர்கள் நன்றி கூறினார். பின்னர் இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் திரு.தேவ் எ படேல் அவர்கள் செஸ் போட்டியைத் தொடக்கி வைத்தார்.
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தலா 4 வீரர்கள் பங்கேற்கின்றனர். இந்தப் போட்டி தொடர்ந்து 10 நாட்கள் 11 சுற்றுகளாக நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு ஆட்டத்துக்கும் தலா 1½ மணி நேரம் ஒதுக்கப்படும். இதில் 40-வது காய் நகர்த்தலுக்கு பிறகு எஞ்சிய ஆட்டத்துக்கு 30 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அத்துடன் தொடக்கத்தில் இருந்து ஒவ்வொரு நகர்வுக்கும் 30 வினாடி வீதம் அதிகரித்துக் கொண்டே போகும். இப்போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ₹3000000. முதல் பத்துப்பரிசுகள் ₹700000, ₹550000, ₹450000, ₹350000, ₹250000, ₹200000, ₹150000, ₹150000, ₹100000, ₹100000.
போட்டியில் பங்குபெற்ற வீரர்கள் அனைவருக்கும் பள்ளி சேர்மன் திரு. KP. குமரேசன் அவர்கள் மற்றும் துணைச் சேர்மன் திரு. K. அருண்குமார் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். மேலும் பள்ளி துணை முதல்வர் திருமதி. பிரேமசித்ரா அவர்கள் பள்ளியின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
No comments