Breaking News

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 31வது பட்டமளிப்பு ஆளுனர் ஆர்.என் ரவி தலைமையில் நடைப்பெற்றது.


நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தின் 31வது பட்டமளிப்பு ஆளுனர் ஆர்.என் ரவி தலைமையில் நடைப்பெற்றது. 33 ஆயிரத்து 821 பேர் பட்டம் பெறும் நிலையில் 571 மாணவர்களுக்கு நேரடியாக ஆளுனர் பட்டங்களை வழங்கினார். பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக 31 வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வளாகத்தில் வ.உ.சி அரங்கில் நடைபெற்றது. மொத்தமாக இந்த பட்டமளிப்பு விழாவில் 33 ஆயிரத்து 821 பேருக்கு பட்டங்களை பெறுகின்றனர். இதில் தமிழக ஆளுனரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்துகொண்டு தங்க பதக்கங்களை பெற்ற 111 பேருக்கும் முனைவர் பட்டங்கள் பெற்ற 460 பேர் என மொத்தம் 571 பேருக்கு நேரடியாக படங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் ஆண்டறிககையை பல்கலைகழக துணை வேந்தர் சந்திரசேகர் வெளியிட்டார்.தொடர்ந்து பட்டமளிப்பு விழா பேருரையை தேசிய புவி அறிவியல் துறை இயக்குனர் சலபதி ராவ் நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் உலக அளவில் புதிய கல்விகொள்கை உலக அரங்கில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. உலக அளவில் உள்ள மாணவர்களும் இந்தியாவில் வந்து கல்வி கற்கும் வகையில் இந்திய கல்வி தரம் உயர்ந்துள்ளது. 

இந்திய கல்வி அமைப்பு மிகப்பெரும் மேம்பாட்டை அடைந்துள்ளது.குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி பெரும் வகையில் கல்வி அமைப்பு நாட்டில் செயல்படுகிறது.உயர் கல்வியில் தொடர்ந்து இந்தியா மேம்பட்டு வருகிறது. இந்திய சுதந்திரத்தின் நூற்றாண்டு 2047 ம் ஆண்டு கொண்டாடும் போது உலக அளவில் சமூதாய வளர்ச்சி பொருளாதாரம் போன்றவைகளில் சூப்பர் பவர் என்ற நிலையில் உலக அளவில் இந்தியா அடையும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை என பேசினார்.

இந்த விழாவில் தமிழக உயர்கல்விதுறை அமைச்சரும் பல்கலைக்கழக இணை வேந்தருமான கோவி செழியன் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் விழாவில் கலந்துகொள்ளவில்லை. இந்த பட்டமளிப்பு விழாவில் தங்கபதக்கம் பெற்ற 111 பேரில் 97 பேர் பெண்கள் என்பது முனைவர் பட்டம் பெற்ற 460 பேரில் 377 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடதக்கது.

பல்கலைகழகங்களில் முனைவர் பட்டம் பெறுபவர்களில் 337 பேர் இடம்பெற்றிருப்பதும் அதிகளவில் பெண்கள் முனைவர் பட்டம் பெற்றதும்  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது 

No comments

Copying is disabled on this page!