திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் அக்டோபர் மாதம் ரூ.3.62 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது.
இத்திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருமானம் மாதந்தோறும் எண்ணப்படுகிறது. இதன்படி நேற்று (அக். 24) மற்றும் இன்று (அக். 25) உண்டியல் எண்ணிக்கை கோயில் வசந்த மண்டபத்தில் வைத்து நடந்தது. கோயில் தக்கார் அருள்முருகன், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் எண்ணும் பணிகள் நடந்தது.
உண்டியல் எண்ணும் பணியில் சிவகாசி பதினெண் சித்தர் மடம் பீடம் குருகுல வேத பாடசாலை உழவாரபணிக் குழுவினர், தூத்துக்குடி ஸ்ரீ ஜெயமங்கள ஆஞ்சநேயர் உழவாரப்பணிக் குழுவினர் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நடந்த உண்டியல் எண்ணிக்கையில், 3 கோடியே 62 லட்சத்து 18 ஆயிரத்து 791 ரூபாயும் (ரூ. 3,62,18,791), தங்கம் 1 கிலோ 55 கிராம், வெள்ளி 20 கிலோ 336 கிராம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 675-ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ. முகேஷ் செல்: 7339011001
No comments