Breaking News

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா 28.10.2024 (திங்கள்கிழமை) மாலை 4.00 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக் கலையரங்கில் நடைபெற உள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 35-ஆவது பட்டமளிப்பு விழா 28.10.2024 (திங்கள்கிழமை) மாலை 4.00 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக் கலையரங்கில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. க. ரவி  தெரிவித்ததாவது: தமிழ்நாடு ஆளுநரும்,  அழகப்பா பல்கலைக்கழக வேந்தருமாகிய ஆர்.என்.ரவி,  பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை வகித்து மாணவ மாணவியருக்கு பட்டங்களை வழங்குகின்றனர், பேரா. பவன் குமார் சிங்  இயக்குநர், இந்திய மேலாண்மை நிறுவனம், திருச்சிராப்பள்ளி முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தவுள்ளார்.

தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சரும், அழகப்பா பல்கலைக்கழக இணைவேந்தருமாகிய முனைவர் கோவி.செழியன்  விழாவில் பங்கேற்று சிறப்பிப்பார், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. க. ரவி  வரவேற்புரையும், பல்கலைக்கழகத்தின் சாதனைகள் பற்றியும் உரை நிகழ்த்துகிறார், இப்பட்டமளிப்பு விழாவில் 3 பேர் அறிவியல் அறிஞர் பட்டமும் (D.Sc.) 93 பேர் முனைவர் (Ph.D.) பட்டமும் மேலும் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 1838 மாணவர்களும், இணைப்புக் கல்லூரிகளில் பயின்ற 11835 மாணவர்களும், இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 3979 மாணவர்களும், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின் வாயிலாக பயின்ற 24306 மாணவர்களும் இணையவழிக் கல்வியில் பயின்ற 379 மாணவர்களும் சேர்த்து ஆக மொத்தம் 42433 மாணவ, மாணவியர்கள் பட்டங்கள் பெறுகின்றனர்.

இதில் 277 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்கள் நேரிடையாக வழங்கப்படவுள்ளது. அவர்களில் 3 அறிவியல் அறிஞர் பட்டஆய்வாளர்களும் 93 முனைவர் பட்ட ஆய்வாளர்களும் 181 ரேங்க் பெற்றவர்களும், தங்கபதக்கம் பெற்றவர்களும் ஆவர், அதில் பல்கலைக்கழகத்தின் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 7 பேரும், முதுநிலை (P.G.) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 47 பேரும், இளநிலை (U.G.) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 12 பேரும், பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil.) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 4 பேரும், முதுநிலை (P.G.) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 23 பேரும், இளநிலை (U.G.) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 30 பேரும், பல்கலைக்கழக இணைவுக் கல்வித் திட்டத்தின் கீழ் முதுநிலை (P.G.) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 21 பேரும், இளநிலை (U.G.) பட்டத்தில் முதல் தரம் பெற்ற 37 பேரும் நேரில் பெறுகின்றனர்.

No comments

Copying is disabled on this page!