Breaking News

வேலூர் மாவட்டம் காது கேளாதோர் முன்னேற்ற சங்கம் சார்பில் 35 ஆம் ஆண்டு விழா.


வேலூர் மாவட்டம் காது கேளாதோர் முன்னேற்ற சங்க சார்பில் நடைபெற்ற 35 ஆம் ஆண்டு விழாவானது வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வி. டி. எம். சித்ரா மஹாலில் நடைபெற்றது  இதில் சிறப்பு விருந்தினராக ரியல் எஸ்டேட் Rtn ஞானசேகரன் கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம். ரமேஷ் காது கேளாதோர் கூட்டமைப்பு சங்கத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பொன்னுசாமி தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் சி. பிரிசிலா  தலைவர் ஜமால் அலி தமிழ்நாடு காது கேளாதோர் சங்கத் தலைவர் சென்னை காது கேளாதோர் சங்கம் மொழிபெயர்ப்பாளர் ஆர். தேவிகா ராணி சங்கம் ஆதரவாளர்கள் வழக்கறிஞர் ஸ்ரீதர் சங்க ஆலோசகர் கே. ஆர். டெல்லி தலைவர் ஆர். ரமேஷ் அமைப்புச் செயலாளர் எம். சுரேஷ்குமார் பொருளாளர் பி. சுமதி துணைப் பொருளாளர்  கே. கோபி மற்றும் வேலூர் மாவட்ட காது கேளாத முன்னேற்ற சங்க மாணவ மாணவி நிர்வாகிகள் வரவேற்பாளர்கள் என விழாவில் கலந்து கொண்டனர்.

இதில் காது கேளாத பள்ளிக்கூடங்களில் செய்கை மொழிச் சான்றிதழ் பெற்ற ஆசிரியர்களை பணியில் அமர்த்த வேண்டும் அரசு மாற்றுத்திறனாளி அலுவலகங்களில் வழங்கும் காது கேளாத கருவிகள் தரமானதாகவும் துருப்பிடிக்காத நல்ல கருவிகளை வழங்க வேண்டும் என்றும் காக்ளியர் முறையில் காதுகளில் காது கருவி பொருத்தும் முறையை தடை செய்ய வேண்டும் என்றும் இந்த முறையினால் மின்னல் மற்றும் மின்சாரம் தாக்கும் அபாயம் இருப்பதால் இதனைத் தடை செய்ய வேண்டும் என்றும் அரசு வேலைவாய்ப்பில் 3 சதவீதத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு  1 சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.

தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் காது கேளாதோர் கான உதவித்தொகை  ரூபாய் 1500 வழங்கப்பட்ட வந்த நிலையில் 6000 ரூபாய் உயர்த்தி வழங்கிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!