ராணிப்பேட்டையில் ராஜா தேசிங் ராணி பாய் 310 ஆம் ஆண்டு நினைவு தினம்.
இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் ஜி பவானி சிங் தலைமை தாங்கினார், நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் பிரகாஷ் மாநில துணைத்தலைவர் விஜயகுமார், பிரேம் சிங், உதவி செயலாளர் ராஜேந்தர் வேலூர் மாவட்ட தலைவர் தேவேந்தர் வேலூர் மாவட்ட செயலாளர் பிரகாஷ் தினேஷ் ஆகியோர் முன்னிலையில் ராஜா தேசிங் ராணி பாய் நினைவு நாள் முன்னிட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதைசெய்து அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நினைவு சின்னங்களை புனரமைக்கும் பணிக்கு ரூ, 2.5 கோடி நிதி ஒதுக்கீடு தமிழக அரசுக்கும் தமிழக அரசு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி அவர்களுக்கும் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சமுதாய மக்களின் சார்பாக நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் செயற்குழு உறுப்பினர்கள் ரகுநாத் மணிராம் மேரு சிங் ஹரி பாலாஜி மகளிர் அணி அமைப்பாளர் ருக்மணி சென்னை மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் நளினி ரவீந்திரநாத் சுதேஷ் சதீஷ். வசந்தி ராஜா தேசிங் வம்சாவழியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மலத்துவி அஞ்சலி செலுத்தினார்கள்.இந்த நினைவு தினத்தை முன்னிட்டு 200 மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments