கந்திலி ஒன்றியத்தில் ரூ260.48 லட்சம் மதிப்பீட்டில் சாலை பணிகளை துவக்கி வைத்த எம்பி.
திருப்பத்தூர் மாவட்டம் கந்தலி தெற்கு ஒன்றியம் கதிரிமங்கலம் பகுதிகளில் ரூ260.48 லட்சம் மதிப்பீட்டில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகளை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், கந்திலி தெற்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல் மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ரமேஷ் மற்றும் முன்னோடிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள்.
No comments