தருமபுரம் ஆதீனம் ஜென்ம நட்சத்திரத்தை முன்னிட்டு 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து குழந்தைகளுக்கு படுக்கை மெத்தை பழம் இனிப்புகள் வழங்கி ஆசி வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே தருமபுரத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற தருமபுரம் ஆதின மடம் மிகவும் தொன்மை வாய்ந்த ஆதீன மடத்தின் 27 வது மடாதிபதியாக உள்ள தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பிரம்மாச்சாரியார் சுவாமிக்கு இன்று ஜென்ம நட்சத்திரம் மற்றும் 60 வயது தொடக்கத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகள் அன்னதானம் செய்தல், உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தருமபுர ஆதீனத்தின் ஜென்ம நட்சத்திர விழாவை முன்னிட்டு இன்று பிறந்த 25 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. சீர்காழி சேர்ந்த கல்வி காவலர் சமூக சேவகர் கொடையாளர் மார்கோனி ஏற்பாட்டில் தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் மருத்துவமனைக்கு நேரில் வந்து 25 குழந்தைகளுக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்து குழந்தைகளுக்கு படுக்கை மெத்தை பழம் இனிப்புகள் வழங்கி ஆசி வழங்கினார் நிகழ்ச்சியில் மருத்துவர்கள் செவிலியர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்கள் வணிகர்கள் தொழிலதிபர்கள் என பலர் பங்கேற்றனர். இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டதையடுத்து பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.
No comments