புதுச்சேரியில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் தனியார் நிறுவன தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை.
புதுச்சேரி கல்மண்டபம் காலனிப் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித் (26). தனியார் நிறுவன கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக,சிறுமியின் தரப்பில் அளித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீஸார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து ரஞ்சித்தை கைது செய்தனர்.
ரஞ்சித் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கின் விசாரணை
முடிந்த நிலையில், போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி தீர்ப்பளித்தார். அதன்படி குற்றஞ்சாட்டப்பட்ட ரஞ்சித்துக்கு போக்சோ சட்டப்பிரிவு 6ன்கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதில் அரசு வழக்கறிஞராக பச்சையப்பன் ஆஜரானார்.
No comments