Breaking News

தீபாவளி பண்டிகையொட்டி நடைபெற்ற உளுந்தூர்பேட்டை வாரச்சந்தையில் 2 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.


தமிழகத்தில் மையப்பகுதியில் உள்ள உளுந்தூர்பேட்டையில் வாரம் தோறும் புதன்கிழமைகளில் வாரச் சந்தை நடப்பது  வழக்கம் இன்று நடைபெற்ற இந்தசந்தைக்கு தியாகதுருவம் திருக்கோவிலூர் ஆசனூர் மடப்பட்டு சேந்தநாடு குன்னத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

இந்துக்களின் பண்டிகளின் ஒன்றான தீபாவளி பண்டிகை அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஆடுகளின் விற்பனை கலை கட்டியது காலை ஆறு மணிக்கு தொடங்கி இந்த சந்தையில்  சேலம் ஈரோடு வேலூர் கடலூர் விழுப்புரம் திருவண்ணாமலை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள் வழக்கத்தைவிட ஆடுகளை வாங்கி குவித்தனர்.

வெள்ளாடு செம்மறி ஆடு என ரகத்திற்கு  ஏற்ப ஒவ்வொரு ஆடும் ரூபாய 8000 முதல் 20 ஆயிரம் வரை ஆடுகள் விற்பனையானது கடந்த வாரம் வரை இந்த சந்தையில் 50 லட்சம் ரூபாய் ஆடுகள் விற்பனை நடைபெற்ற நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 2 கோடிக்கு மேல் ஆடுகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

No comments

Copying is disabled on this page!