தமிழின் முதல் புதினம் (நாவல்)இயற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள்..
தமிழின் முதல் புதினம் (நாவல்)இயற்றிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாளை முன்னிட்டு, மயிலாடுதுறையில் அவரது நினைவிடத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு, தமிழ் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் வேதநாயகம் பிள்ளை அவர்களின் பிறந்த தினம் அனுசரிக்கப்பட்டது கிபி 1826-ஆம் ஆண்டு கவிஞர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தார். பின்பு மயிலாடுதுறையில் கோர்ட் முன்சீப்பாக (நீதிபதியாக) பணியாற்றிய அவர், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக பல்வேறு தமிழ், இலக்கிய நூல்களை எழுதியவர். வெளிநாடுகளில் பிரபலமாகி வந்த நாவல் கதைகளை போன்று தமிழின் முதல் நாவலான பிரதாபமுதலியார் சரித்திரத்தை எழுதினார். இதனால் தமிழ் முதல் புதினத்தை இயற்றியவர் என்ற பெயர் பெற்றார். அவரது 198-வது பிறந்ததினம் இன்று மயிலாடுதுறையில் தமிழ்சங்கத்தினரால் கொண்டாடப்பட்டது. தமிழுக்கு தொண்டாற்றிய வேதநாயகம் பிள்ளையின் திருவுருவ சிலை மயிலாடுதுறை கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ளது. அண்ணாரது திருவுருவ சிலைக்கு தமிழ் அறிஞர்கள், மாயூரம் தமிழ் சங்கத்தினர் ,மயிலாடுதுறை தமிழ்ச் சங்க நிறுவனர் ஜெனிபர் எஸ்.பவுல்ராஜ், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ். ராஜகுமார், மயிலாடுதுறை பங்குதந்தை புனித சவேரியார் ஆலயம் S.தார்சில் ராஜ், துரை குணசேகரன், மதியழகன், விழிகள் ராஜ்குமார், மகாவீர் சந்த் ஜெயின், குரு ராகவேந்திரன் அறம்செய் ராகவசிவா, மற்றும் பல்வேறு இயக்க அமைப்பினர் பொதுமக்கள் மலர் தூவி மாலை அணிவித்தும், அஞ்சலி செலுத்தினர்.
No comments