Breaking News

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 167 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்.


திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்ஷ்ரேயா குப்தா, உத்தரவின் பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் இன்று (12.10.2024 ) துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்த சோதனையில் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் மணிகண்டன் (வயது 41) என்பவர் நடத்தி வந்த கடையில் சுமார் 136 கிலோ குட்கா போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் உமராபாத்  வடசேரி பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (35) என்பவரின் பெட்டிக்கடையில் சுமார் 9 கிலோ குட்கா மற்றும் ஓணான்குட்டை  மணிரத்தினம் (72) என்பவரின் கடையில் சுமார் 500 கிராம் குட்கா பொருட்களும், ஆம்பூர் சான்றோர்குப்பம் கவியரசன் (42) கடையில் சுமார் 21.5 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த மேற்கண்ட எதிரிகள் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். 

No comments

Copying is disabled on this page!