Breaking News

ஜோலார்பேட்டை அருகில் வீட்டில் 150 லிட்டர் சாராயம் ஊரல் அழிப்பு ஒருவர் கைது.


திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் மாவட்டத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  

திருப்பத்தூர் மதுவிலக்கு ஆய்வாளர் உலகநாதன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஜோலார்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜி (26 ) என்பவர் வீட்டில் சோதனை செய்ததில் அவர் சட்டவிரோதமாக காய்ச்சிய 150 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது. 

மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தல், அவர்களின் வங்கி கணக்கு முடக்குதல், நீதிமன்ற காவலுக்கு உட்படுத்துதல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments

Copying is disabled on this page!