Breaking News

காட்பாடி(ஆர்டிஓ ) சோதனை சாவடியில் 24 மணி நேரத்தில் 1.39 லட்சம் பணம் பறிமுதல்.


வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள வட்டார போக்குவரத்து துறை சோதனைச் சாவடியில் அதிகாலை நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூபாய் 1.39 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். 

வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு நாள்தோறும் சரக்கு வாகனம் போக்குவரத்து அதிகம் நடைபெறுகிறது அதேபோல் திருப்பதி செல்லும் பெரும்பாலான வாகன போக்குவரத்தும் காட்பாடி வழியாக செல்கின்றது இதன் காரணமாக காட்பாடி கிருஷ்டியான் பேட்டை வட்டாரப் போக்குவரத்து துறை (ஆர்டிஓ ) சார்பில் சோதனை சாவடி இயங்கி வருகின்றது. 

இங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் ஒருவர் தலைமையில் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு வாகனங்கள் முறையான அனுமதியுடன் தமிழகத்துக்குள் வருகின்றனவா சரக்கு வாகனங்களின் எடை சுற்றுலா வாகனங்களின் அதிகப்படியான பயணிகள் உள்ளனவா என்பது உள்ளிட்டவற்றை கண்காணிப்பதுடன் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அபராதமும் விதித்து கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. 

இந்நிலையில் இந்தச் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை  4 மணி அளவில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி தலைமையில் அலுவலக பணியாளர் கல்யாணசுந்தரம் உதவியாளர் பரிமளா மற்றும் வெளி நபர்கள் 3 பேர் இருந்தனர் சோதனைச் சாவடி கணினி அறை மற்றும் அருகில் இருந்த இடங்களில் சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத பணம் ரூபாய் 1 லட்சத்து  38ஆயிரத்து 900 தொகை பறிமுதல் செய்தனர்.

மேலும் அலுவலக ஆவணங்களை சோதனை செய்தலில் நேற்று தொடங்கி இன்று அதிகாலை வரை 24 மணி நேரத்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்திக்கு பணி என்ற நிலையில் பல்வேறு வாகனங்களில் வெளி மாநில வாகனங்களில் இருந்து ரூபாய் 1.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு அரசு கணக்கில் வரவு வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதில் அபராதம் இல்லாமல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ரூபாய் 1.39 லட்சம் லஞ்சமாக 3 வெளி நபர்களை நியமித்து வாகன ஓட்டிகள் இடம் வசூல் செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது அந்த அலுவலக அறையிலிருந்து ஆந்திராவில் இருந்து காட்பாடி வழியாக வேலூர் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் காய்கறி பழங்கள் ஏற்றிய லாரிகளில் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட காய்கறி மற்றும் பழக்கடைகள் இருந்தன. 

காட்பாடி வட்டாரப் போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத பணம் ரூபாய் 1.39 லட்சம் பறிமுதல் தொடர்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் ஸ்ரீதேவி ஜெயந்தி உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார் 

No comments

Copying is disabled on this page!