ஈரோடு காஞ்சி கோவிலில் கஞ்சாவை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 02 இளைஞர்களை காஞ்சி கோவில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் பாறைக்காடை என்ற பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர், அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சந்தேகத்திற்கு இடமான 02 இளைஞர்களை பிடித்து விசாரித்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் போலீசாருக்கு மேலும் சந்தேகம் வலுத்தது பின்பு இரண்டு இளைஞர்களையும் சோதனை செய்த பொழுது மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கஞ்சாவை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பெருந்துறை விவேகானந்தர் நகர் பகுதியை சேர்ந்த முகமது ஜுபேர் (20) மற்றும் பெருந்துறை காடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜய் (21) ஆகிய இரண்டு இளைஞர்களையும் உடனடியாக காஞ்சி கோவில் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 15,000 மதிப்புள்ள 1.030 கிலோ கஞ்சா மற்றும் விலை உயர்ந்த இருசக்கர வாகனமான கே டி எம் ட்யூக் (KTM DUKE 250) வாகனத்தையும் காஞ்சி கோவில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
No comments