எதிர்பாராத விதமாக பெய்த கனமழையின் காரணமாக, நீர்த்தேங்கிய சில பகுதிகளில் சீரமைப்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது - மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் தகவல்.
காரைக்குடி மாநகராட்சி பகுதியில், எதிர்பாராத விதமாக பெய்த கனமழையின் காரணமாக, நீர்த்தேங்கிய சில பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழகத்தில் பருவமழை, புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, துரிதமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, தற்சமயம் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து பகுதிகளும் மேற்கொண்டு, முனைப்புடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.
காரைக்குடி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எதிர்பாராத விதமாக, மாலை சுமார் 3.45 மணி முதல் 5.30 மணி வரை பெய்த அதிகனமழை (14 செ.மீ) காரணமாக, நகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டது. அதில், வார்டு எண் 3, கோட்டையூர் சாலை. வாட்டர் டேங்க் சந்திப்பு, வார்டு எண் 18. நேதாஜி சாலை சந்திப்பு. வார்டு எண் 23 SRM தெரு சந்திப்பு. கண்ணன் பஜார் சந்து, வார்டு எண் 27 சத்யா நகர், வார்டு எண் 36 சத்தியமூர்த்தி நகர் 2வது வீதி. வார்டு எண் 28 காளவாய் பொட்டல். வார்டு எண் 10 செல்லம் செட்டி ஊரணி சாலை, வார்டு எண் 22 மேலஊரணி வாய்க்கால், சிவா பாலி கிளினிக் பின்புறம். வார்டு எண் 31 பனந்தோப்பு. கருப்பர் கோவில், வீரையன் கண்மாய் முகப்பு. வார்டு எண் 25 மார்கண்டேயன் கோவில் கால்வவாய், அத்திமரத்து காளி கோவில் கால்வாய். கொப்புடையம்மன் கோவில் ஊரணி அருகில், கல்லுக்கட்டி வாட்டர் டேங்க் வளாகம் ஆகிய பகுதிகளில் தேங்கிய மழைநீரினை, 7 JCB இயந்திரங்கள். 5 ஆயில் இன்ஜின் (10 HP), 3 பெட்ரோல் இன்ஜின், 1 Jet Roding Machine. 2 வாட்டர் டேங்கர் இன்ஜின், 5 டிராக்டர், 1 மினி JCB இயந்திரம் ஆகியவற்றை பயன்படுத்தி, இப்பணியில் சுமார் 40 பணியாளர்களை ஈடுபடுத்தி, அனைத்து பகுதிகளிலும் மழைநீர் தேங்காத வண்ணம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு, சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இனிவரும் காலங்களிலும் மழைநீர் வாய்க்கால்களில் எவ்வித அடைப்பும் ஏற்படாமல் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித், தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது, காரைக்குடி மாநகராட்சி மேயர் முத்துத்துரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா, மாநகராட்சி செயற்பொறியாளர். இசக்கி, மாநகர் நல அலுவலர் திவ்யா, காரைக்குடி வட்டாட்சியர் ராஜா உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments