Breaking News

வாணியம்பாடியில் டாக்டர் ஏபிஜே பசுமை புரட்சி அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா கணவாய் புதூர் பகுதியில் 15.10.2024 செவ்வாய் கிழமை இன்று காலை 9:00 மணியளவில் டாக்டர் ஏபிஜே பசுமைப் புரட்சி அறக்கட்டளை சார்பில் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் 93 வது பிறந்த நாள் விழா கனவாய் புதூர் பகுதியில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவி மரியாதை செலுத்தியும் இனிபுகள் வழங்கினார்கள்.

அதனை தொடர்ந்து  கனவாய் புதூர் கோல்டன் நகர் பகுதியை பசுமையாக்கும் முதற் கட்ட மரக்கன்றுகள் நடும் விழாவும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முத்தமிழ் மன்றம் தலைவர் நா.பிரகாசம்.தமிழ்நாடு வழக்கறிஞர்கள் பிரிவு துணை செயளாலர் தேவக்குமார் பத்திரிகை நண்பர்கள் விஜய்குமார் மற்றும் கனவாய் புதூர் ஊராட்சி தலைவர் பழனி கலந்து கொண்டு பசுமை விழாவை தொடங்கி வைத்தனர்.

உடன் அறக்கட்டளை தலைவர் சேதுராமன் உமேஷ் செயளாலர் சதீஷ்குமார் வருகை புரிந்த அனைவருக்கும் விதைகள் அடங்கிய பேனாக்கள் கொடுத்து வரவேற்றனர்.

No comments

Copying is disabled on this page!