தேசிய தன்னார்வ ரத்ததான மாதத்தை ஒட்டி காரைக்கால் குருதி கொடையாளர்கள் சார்பில் இரத்ததான முகாம்.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை இரத்த வங்கியில் தேசிய தன்னார்வ இரத்த தான மாதத்தை முன்னிட்டு காரைக்கால் குருதிக் கொடையாளர்கள் அமைப்பு சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 50 க்கும் மேற்பட்ட தன்னார்வளர்கள் இரத்த தானம் செய்தனர். இந்த முகாமை குருதி கொடையாளர்கள் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் வேலுகுமார் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் சதிஷ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். இந்த முகாமில் குருதி கொடையாளர்கள் கௌரவ ஆலோசகர் அருள்முருகன், பொறுப்பாளர்கள் சுரேஷ், வினோத், செல்வராஜ் மற்றும் குருதி கொடையாளர்கள் கலந்துகொண்டனர். இம்முகாமில் இரத்ததானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. வருடம் முழுவதும் இரத்ததானம் வழங்கி மக்களின் உயிர்காத்த தன்னார்வலர்களுக்கு குருதிக் கொடையாளர்கள் அமைப்பு சார்பில் மாத இறுதியில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments