அரசுக்கு அல்வா கொடுத்த ஆம்னி பஸ் ஒரே பதிவு எண்ணில் நான்கு பேருந்துகள் சாலை வரி கட்டாமல் ஏமாற்றப்பட்டது அம்பலம்.
அரசுக்கு அல்வா கொடுத்த ஆம்னி பஸ் ஒரே பதிவு எண்ணில் நான்கு பேருந்துகள் சாலை வரி கட்டாமல் ஏமாற்றப்பட்டது அம்பலம் பாஸ்ட் ட்ராக் பயன்படுத்தப்பட்டதால் சுங்கச்சாவடியில் மடக்கிப்பிடிக்கப்பட்ட சொகுசு பேருந்து பறிமுதல்.
ஒரே பாஸ்ட்டாக்கில் இயக்கப்பட்ட இரண்டு பேருந்துகள் எந்தவித ஆவணம் இன்றி இயக்கப்பட்ட தனியார் சொகுசு பேருந்து உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து PY05 J3485 என்ற பதிவு எண் கொண்ட தனியார் சொகுசு பேருந்து ஒன்று 23 பயணிகளை ஏத்திக்கொண்டு இன்று காலை சென்னைக்கு சென்று கொண்டிருந்தது இந்த பேருந்தை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டி சென்றார். இந்த பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று காலை வந்து கொண்டிருந்த பொழுது அங்கு சுங்க கட்டணம் வசூலிப்பதற்காக பேருந்து நிறுத்தப்பட்டது அப்பொழுது இந்த பேருந்தில் இருந்த பாஸ்ட்ராக் எண் மற்றொரு பேருந்துக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடிகள் செல்வம் என்பவர் அந்த பேருந்து நிறுத்தி சுங்கச்சாவடி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதை அடுத்து உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கும் உளுந்தூர்பேட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது அதன் பேரில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் பேருந்தில் ஆவணங்களை ஆய்வு செய்தனர் அப்பொழுது புதுச்சேரி பதிவெண் கொண்ட பரதன் ஏர் டிராவல்ஸ் பேருந்து மற்றொரு உள்ள எல்லாமே ட்ராவல்ஸ் பஸ்ஸின் பதிவெண்ணை தவறாக பயன்படுத்தி ஓட்டி வந்ததும் தொடர்ந்து இதே பதிவு எண்ணில் நான்கு பேருந்துகள் மாற்றி மாற்றி ஓட்டி வந்தாலும் தெரியவந்தது பேருந்தில் இருந்த PY 05 J 4385 என்ற பதிவில் கொண்ட பேருந்தின் ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு தனியார் சொகுசுப் பேருந்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சாலை வரி கட்டாமல் ஒரே பேருந்தின் ஆவணத்தை கொண்டு நான்கு பேருந்துகளை போலி ஆவணங்களை பயன்படுத்தி ஓட்டி வந்ததும் அதன் மூலம் பல லட்சம் ரூபாயை தனியார் சொகுசுப் பேருந்து நிறுவனம் சம்பாதித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
மதுரையிலிருந்து 900 ரூபாய் பணம் கொடுத்து சென்னைக்கு பயணம் செய்த பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்ட நிலையில் பயணிகளுக்கு தலா 200 ரூபாய் வழங்கப்பட்டதால் தனியார் சொகுசு பேருந்து ஓட்டுனர் சுரேஷிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
No comments