Breaking News

புதுச்சேரியில் வரும் 17ஆம் தேதி மிலாடி நபியையொட்டி, அனைத்து வகை மதுக்கடைகளையும் மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது.


புதுச்சேரி கலால்துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் ஆண்டுதோறும் மிலாடி நபி தினத்தன்று, மதுக்கடைகளை மூட, அரசு உத்தரவிடுவது வழக்கம். இந்தாண்டு வரும், 17ம் தேதி மிலாடி நபி கொண்டாடப்பட உள்ளது. அன்று புதுச்சேரியில் உள்ள சாராயக்கடைகள், கள்ளுக்கடைகள், சில்லரை மதுக்கடைகள் மற்றும் பார்கள், ரெஸ்ட்டோ பார்கள் உள்ளிட்ட அனைத்து வகையான மதுக்கடைகளும் மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. மீறி இயங்கினால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Copying is disabled on this page!