Breaking News

மணலூர்பேட்டை பேரூராட்சியில் விநாயகர் சதுர்த்தி விழா!!


கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் பேரூராட்சியில் சிவன் கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய 22ஆம் ஆண்டு  விநாயகர் சதுர்த்தி திருவிழா பிறகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமம் மற்றும் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து பொதுமக்கள் வழிபாடு செய்தனர். விழாக்குழுவின் சார்பில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

மிளகு விநாயகர் ஆலயத்தில் விழாக் குழுவினர், இளைஞர்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. மணலூர்பேட்டை பேரூராட்சியில் மாரியம்மன் கோவில், எம் ஜி ஆர் நகர் மற்றும் பல்வேறு இடங்களில் விநாயகர் பெருமானுக்கு பலவகையான பழங்கள் மற்றும் கொழுக்கட்டை, சுண்டல் படையிலிட்டு வானவேடிக்கை முழங்க முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் வழிபாடு செய்தனர். அனைவருக்கும் கொழுக்கட்டை, சுண்டல், பழங்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!