மறைந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தலைவர் வெள்ளையன் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டு அவரது உடல் கொண்டு பிச்சிவிளையில் உள்ள அவருக்கு சொந்தமான மண்டபத்தில் மரியாதை செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை முதல் பலரும் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர்.
குறிப்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், மற்றும் பாஜக பிரமுகர்கள், தமிழ்நாடு முழுவதிலும் இருந்து வந்த வணிகர்கள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து அவரது உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அவருக்கு சொந்தமான தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்களும், வணிகர்களும் கலந்து கொண்டனர்.
- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ. முகேஷ்
No comments