இராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு.
இராணிப்பேட்டை நவல்பூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மேம்பாலத்தின் அருகில் மணியக்காரர் தெரு கிரேஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி செல்லும் வழியில் சாலையில் ஒரே சீராக போடாமல் மேடு பள்ளமாக போட்டு உள்ளனர் இதனால் மழைநீர் செல்வதற்கு வழி இல்லாமல் ரோட்டிலேயே தேங்கும் நிலை உள்ளது இதை அந்தப் பகுதி மக்கள் அந்த சாலை பணியை செய்யவிடாமல் முற்றுகையிட்டனர், இதனால் ரோடு வேலை செய்யும் பணியாளர்கள் முற்றுகையிட்ட பொதுமக்களுக்கு சரியான பதில் கூறாமல் ரோடு ரோலர் எடுத்துச் சென்று விட்டனர் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments