Breaking News

உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.


விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது இதற்கான அனுமதி இன்று காலை வழங்கப்பட்ட நிலையில் அதனை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட இளைஞரணி தலைவர் மோகன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

நடிகர் விஜய் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெறும் எனவும் 2026 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக நடிகர் விஜய் பொறுப்பேற்று மக்களுக்கான சேவை திட்டத்தை அறிவிப்பார் என்றும் அக்கட்சியினர் தெரிவித்தனர், இந்நிகழ்ச்சியில் நகரத் தலைவர் பாரதிராஜா, ஒன்றிய இளைஞரணி தலைவர் செல்வக்குமார், நகர இளைஞரணி தலைவர் கார்த்திக், திருநாவலூர் ஒன்றிய பொருளாளர் சுபாஷ்,  ஒன்றிய இளைஞரணி பொருளாளர் அஜய்குமார், திருநாவலூர் ஒன்றிய துணைத்தலைவர் பெரியசாமி  ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் பாலா கணையார் கிளை தலைவர் பாரத், ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!