தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்; அக்கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர்.
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை திரைப்பட நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தார். இதைத்தொடர்ந்து கட்சி கொடியை அறிமுகப்படுத்தி, மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தது. விக்கிரவாண்டியில் விஜயின் தவெக மாநாட்டை செப்டம்பர் 23 இல் நடத்த காவல்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்ததாக அக்கட்சித் தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் உற்சாகமாக முறையில் கொண்டாடினர்.இந்த நிலையில் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி அருகில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் குட்டி கோபி தலைமையில் சுமார் 200 க்கு மேற்பட்டோர் ஒன்று திரண்டு உற்சாகமாக கொண்டாடினர். அப்போது பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். குறிப்பாக பேருந்து நிலையம் அருகே சாலையோரம் கடைகள் நடத்தி வரும் தாய்மார்களுக்கு புடவை கொடுத்து இனிப்புகளை வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தனர் தொடர்ந்து கட்சி அங்கீகரிக்கப்பட்டதை கொண்டாடினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அமீன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜ்குமார், மாவட்ட இணை செயலாளர் ஆதாம் அறிவரசன், ஒன்றிய தலைவர்கள் மனோகரன், ரமேஷ், கமல், ராஜா, நடராஜன், ரவி, ராஜ்குமார், ஹரிஷ் மற்றும் மயிலாடுதுறை நகரம் ஆசிப், அம்பேத் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments