Breaking News

ஊசுடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் புதிய மின்மாற்றிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார் அர்ப்பணித்தார்.


ஊசுடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருமாம்பேட் அமைதி நகர் மற்றும் சிவசக்தி நகர் ஆகிய பகுதியில் மின் பற்றாக்குறை ஏற்படுவதால்  அமைச்சர்  சரவணன் குமார்  முயற்சியில்  ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில் புதிய இரண்டு மின்மாற்றிகள்  அமைப்பதற்கான அரசாணை பெற்று, அதன் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், ஊசுடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சாய் ஜெ சரவணன்குமார் கலந்து கொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி மின்மாற்றிகளை இயக்கி மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.  இந்நிகழ்ச்சியில் துறை சார்ந்த அதிகாரிகள், பாஜக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!