Breaking News

கோவையில் முதன்முறையாக மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் – தொடங்கி வைத்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்.


கோவையில் முதன்முறையாக கலை பொழுதுபோக்கு அமைப்பின் சார்பில் கவுண்டம்பாளையம் அடுத்துள்ள கே.என்.ஜி.புதூர் சாய் நகர் எஸ்.எம்.ஆர். ஸ்போர்ட்ஸ் அரினாவில் மாநில அளவிலான டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் இரவு – பகல் ஆட்டமாக 2 நாட்கள் நடைபெற்றன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 16 தலைசிறந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்றன. இந்த போட்டிகளை கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தொடங்கி வைத்தார். இதில் திமுக மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி தலைமை வகித்தார். 

துடியலூர் பகுதி செயலாளர் அருள்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் டி.பி.சுப்பிரமணியன், எஸ்.எம்.ஆர். குரூப் எஸ்.ஆர்.மருதாச்சலம், முன்னாள் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் கண்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சந்திரசேகரன், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி பச்சைமுத்து, கற்பகம் ராஜ்சேகரன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். இதில் 140 அடி அகலம் கொண்ட டர்ஃப் கிரவுண்டில் சுற்றிலும் மற்றும் மேல் பகுதியிலும் வலை உள்ளதால் அதற்குள் மட்டும் கிரிக்கெட் விளையாட முடியும். மேலும் 7 ஓவர் மேட்சாக இருப்பதால் பேட்டிங்க் செய்யும் அணி முதல் 6 ஓவருக்குள் டபுள் டமாக்கா என்ற ஆபரில் ஏதேனும் ஒரு ஓவரில் ஒரு ரன்னுக்கு 2 ரன்கள் என எடுத்து விளையாடிக்கொள்ள முடியும். அப்போது பீல்டிங் கட்டுபாடுகள் கிடையாது. இதில் ஒரு அணிக்கு 9 பேர் மட்டுமே விளையாட முடியும் உள்ளிட்ட பல நிபந்தனைகளுடன் இந்த டர்ஃப் கிரிக்கெட் லீக் போட்டிகள் நடைபெற்றன. 

இதில் வெற்றி பெறும் முதல் அணிக்கு 30 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையும், 2வது அணிக்கு 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையும், 3வது அணிக்கு 5 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் மற்றும் சிறந்த பீல்டர் உள்ளிட்ட பல பரிசுகளும் வழங்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!